திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளையில் சிக்கிய திருடன்… போலீசார் கிடுக்கு பிடி விசாரணை
திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளையில் சிக்கிய திருடன்… போலீசார் கிடுக்கு பிடி விசாரணை
திருச்சி திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பிரபல கொள்ளையனை திருவெறும்பூர் தனி படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி இவரது தம்பி தேவேந்திரன் இவர்கள் தொழிலதிபர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி தேவேந்திரன் மகன் பாலாஜிக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நிச்சயதார்த்த விழா நடந்தது. அதற்காக அவர்கள் குடும்பத்துடன் 22ஆம் தேதி மாலை சென்று விட்டனர். 23ஆம் தேதி மாலை விழாமுடிந்து வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 92 பவுன் நகை, 6கேரட் வைரம், 5கேரட் பிளாட்டினம், அஞ்சு லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இது சம்மந்தமாக தேவேந்திரன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ் பி சுஜித் குமார் உத்தரவுபடி டிஎஸ்பி அறிவழகன் அறிவுரையில் மூன்று தனிப் படைகள் அமைத்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் திருவையாறு புது அக்ரஹாரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வா கார்த்தி (35)என்ற பிரபல கொள்ளையனை திருவெறும்பூர் தனி படை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரனையில் செல்வாகார்த்தி மீது திருவையாறு கும்பகோணம் உள்ளிட்டகாவல் நிலையங்களில் பல கொள்ளை வழக்குகள் உள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கும்பகோணத்தில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் சிறையில் இருந்து வெளியில் வந்து உள்ளான் என தெரிய வந்துள்ளது.
