துறையூர் பெரியகாண்டி அம்மன் மகாமுனி கோவில் கும்பாபிஷேக விழா !
துறையூர் பெரியகாண்டி அம்மன் மகாமுனி கோவில் கும்பாபிஷேக விழா !
திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெரு, ஸ்ரீ விநாயகர் பெரியகாண்டி அம்மன், மகாமுனி தங்காள் கைலாசம், மதுரை வீரன் தேக்குமலை பொன்னர் சங்கர், வையப் பெருமாள், எருதல பெருமாள், செய்ய பெருமாள் மாசி முதலியார், வீரபாகு சோழராஜா, கன்னிமார்கள் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவின் முதல் நாள் அதிகாலை மங்கல இசை கணபதி ஹோமம் அணுக்கை கணபதி பூஜை வாஸ்து சாந்தி அங்குரார்ப்பணம், யாக பூஜை ஹோமம், பூரணாகுதி தீபாராதனை நடைபெற்றது. மாலை மங்கல இசை எந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தனம் நடைபெற்றது.
மறுநாள் காலை மங்கள இசை விநாயகர் பூஜை, யாக பூஜை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றி குமாரசாமி ஸ்தபதி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.



நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், துறையூர் நகர் மன்றத் தலைவர் செல்வராணி மலர்மன்னன், துறையூர் செளடாம்பிகா பள்ளிக் குழுமங்களின் தலைவர் ராமமூர்த்தி , பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசாமி மற்றும் பீரங்கி சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நாள் இரவு விநாயகர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பால்குடங்கள் எடுத்து துறையூர் நல்ல காவல் தாய் அம்மன் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் பாலக்கரை கடைவீதி வழியாக ஊர்வலம் சென்று சன்னிதானத்தை அடைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூசாரி வட்டம் குடிப்பாட்டு பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
