தேசிய சாகச பயிற்சி முகாமில் பங்கேற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
தேசிய சாகச பயிற்சி முகாமில் பங்கேற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவ மாணவிகள் பங்கேற்ற தேசிய சாகச பயிற்சி முகாம் இமாச்சல் பிரதேஷ் மணலியில் நடைபெற்றது. மற்றும் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு மற்றும் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின அணிவகுப்பு ஆகியவற்றில் கல்லூரியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா குடியரசு தின விழாவை ஒட்டி கல்லூரியில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக பிசினஸ் அண்ட் காமர்ஸ் பிரிவின் துறை தலைவர் செல்வம் , கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி பிரபா, வழக்கறிஞர் மோகன பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
