திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை பணம் கொள்ளை!
மதுரை ஒத்தக்கடை முல்லை நகர் அக்ஷயா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ரேவதி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு காரில் பாண்டிச்சேரி நோக்கி சென்றனர்.

இந்நிலையில் இரவு உணவிற்காக சமயபுரத்தில் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நிறுத்தினர். பின்னர் டிரைவர் உள்ளிட்ட அனைவரும் இறங்கி அந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பினர்.
அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே பார்த்தபோது ரேவதி தனது ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த 13 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி மற்றும் ரூபாய் 62 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
