திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய பாதுகாப்பு மாநாடு!
திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய பாதுகாப்பு மாநாடு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநாடு திருச்சி சிறுகனூரில் நாளை மறுநாள் நடக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சுலைமான் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு கூறியதாவது:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) நடக்கிறது.
காலையில் 9 மணிக்கு கண்காட்சி அரங்கம் தொடங்குகிறது. இதை எடுத்து மாநில நிர்வாகிகள் தொடக்க உரையாற்றுகின்றனர். மாநாட்டில் மாநில செயலாளர் இம்ரான் உருது உரை நிகழ்த்துகிறார். மாநிலச் செயலாளர் அமீன் ஆங்கில உரை நிகழ்த்துகிறார்.


இந்த மாநாட்டில் மதரசா மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடக்கிறது .பித்அத்உருவாக பெரிதும் காரணம் ஆலிம்களா? மக்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
இதில் மாநில தலைவர் சுலைமான்,பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மேலாண்மை குழு தலைவர்சம்சுல் லுஹா ரஹ்மானி,பேச்சாளர் சுலைமான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் தமிழ்நாடு முழுவதும் இருந்து கலந்து கொள்கின்றனர். இஸ்லாமிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 50-க்கும் அதிகமான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளில் ஜமாத்தின் முன்னணி தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
மத்திய அரசினாலும், அதன் கண்ணசைவினாலும் இயங்கும் பல அமைப்புகளால் இஸ்லாமியர்கள் படும் நெருக்கடிகள் குறித்தும், தீர்வு காணும் வகையிலும் மக்களிடம் விளக்கி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மாநில பொருளாளர் இப்ராகிம் ஆகியோர் உடனிருந்தனர்.
