NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

 கணவன் கொடுமை தாங்காமல் குழந்தைகளுடன் பெண் மாயம்!

0

 கணவன் கொடுமை தாங்காமல் குழந்தைகளுடன் பெண் மாயம்!

திருச்சி வடக்கு தாராநல்லூர் நல்லதம்பி கவுண்டர் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) இவரது மனைவி அழகுமணி. இந்த தம்பதியருக்கு கிருத்திகா ஸ்ரீ ( 8) சதீஷ் பாண்டியன்( 5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சதீஷ்குமார் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு ட்ரான்ஸ்போர்ட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அழகுமணி ஒரு தனியார் ஓட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

3

இந்த நிலையில் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமார் மனைவியை அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டை போலீசார் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின்னர் சமாதானமாகி அழகுமணி கணவருடன் சேர்ந்து குடும்ப நடத்தி வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.

5

இதனால் மனவேதனை அடைந்த அழகுமணி கணவனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடன் வெளியே சென்றார்.
ஆனால் எங்கு சென்றார் என்ன ஆனார் என உடனடியாக தெரியவில்லை.

இது தொடர்பாக சதீஷ்குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்துள்ளார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு மணி மற்றும் அவரது ரெண்டு குழந்தைகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

4
Leave A Reply

Your email address will not be published.