திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இலவச பொது மருத்துவ முகாம்! 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இலவச பொது மருத்துவ முகாம்! 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஸவர்னோதயம் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மற்றும் திருச்சி வாசன் கண் மருத்துவமனை, அட்லஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை, எலும்பு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக ஸ்வர்னோதயம் நிறுவனத்தின் சதீஷ் தேவராஜ் துவக்கி வைத்தார். முகாமில் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, தலைவலி, முகத்தில் ஏற்படும் வலி, கை விரல்களில் உண்டாகும் வலிகளுக்கு நவீன முறையில் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட்டது.

மேலும் கண் பரிசோதனை கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிகப்பு, ஒற்றை தலைவலி, கண்ணில் நீர் வடிதல், கண் நீர் அழுத்த நோய், கண் அரிப்பு, சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு, மற்றும் கண் சம்மந்தமான இதர நோய்களுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்வர்னோதயம் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. ரத்தினக்குமார், மண்டல மேலாளர் சண்முகம், பகுதி மேலாளர்கள் மணிகண்டன் மற்றும் சோழன் நகர் கிளை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பணியாளர்களுக்கு மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 500 -க்கும் மேற்பட்ட பொது மக்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
