நந்தவனம் சந்திரசேகரன் எழுதிய நூலுக்குப் பரிசு

கரூர் திருக்குறள் பேரவை 37 ஆம் ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த நூல் போட்டியில் நந்தவனம் சந்திரசேகரன் எழுதிய “சுகமாய் ஒரு ஞானம்” என்ற நூல் மூன்றாம் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா 5-2 -2823 அன்று கரூர் நகரத்தார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருக்குறள் பேரவைத் தலைவர் ப.தங்கராசு தலைமையில் நடைபெற்ற விழாவில் பெங்களூர் தொழிலதிபர் ரவி வீரப்பன் பரிசு வழங்கி சிறப்பித்தார் நாமக்கல் அரசு பரமேஸ்வரன் கடவூர் மணிமாறன் கவிஞர் வெற்றிப்பேரொளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
திருக்குறள் பேரவை செயலர் மேலை பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார்.
