NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பத் திருவிழா!

0

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பத் திருவிழா!

திருச்சி உறையூர் ஜோதிவேல் சிலம்பக்கூடம் சார்பில் தலைமை ஆலோசகர் துரைராஜூ அவர்களின் நினைவாக ஆறாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்ப கலை குழு போட்டிகள் நடைபெற்றது.

தமிழர் சிலம்பக் கலை திருவிழா 2023 என்ற பெயரில் நடைபெற்ற இவ்விழாவில் திருச்சி, மதுரை, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலம்ப கூடங்கள் பங்கேற்றனர்.

இதில் பாரம்பரிய சிலம்ப முறைகள், கத்தி சண்டை, அருவாள் சண்டை, குத்துச்சண்டை செடி வரிசைகள் ,சுருள்வாள், மான் கொம்பு சண்டை, பட்டா எனப்படும் கேடய சண்டை, செடி சிலம்பம், அலங்கார சிலம்பம் என்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

3
சிலம்பத் திருவிழா
சிலம்பத் திருவிழா
5

ஜோதிவேல் சிலம்பக்கூட தலைமை ஆசான் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகள் மற்றும் இதன் பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன், திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் பூரண புஷ்கலா, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் மனோகரன், மேலூர் குணா, கொட்டப்பட்டு பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டி முடிவில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் திருச்சி அம்மன் சிலம்ப கலைக்கூடம் முதலிடம் பெற்று சுழற்கோப்பை மற்றும் பத்தாயிரம் ரொக்க பரிசினை பெற்றது. இரண்டாம் இடம் பெற்ற முத்தமிழ் சிலம்ப கூடம், மூன்றாம் இடம்பெற்ற அகத்தியர் சிலம்பக்கூடம், நான்காம் இடம் பெற்ற நெல் குத்தியார் சிலம்பக்கூடம் ஆகியவற்றிற்கும் சுழற் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இப் போட்டிகளை ஜோதிவேல் சிலம்பக்கூட இளைய ஆசான்கள் தர்மராஜ், கோபாலகிருஷ்ணன், மேலாளர்கள் சரவணன், ஹரிக்குமார் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

4
Leave A Reply

Your email address will not be published.