தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ அணி சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்
தன்னிகரற்ற தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.மருத்துவ அணி சார்பில் கிழக்கு மாநகரம் காட்டூர் பகுதி 43-வார்டு பிளோமினால் புரம் பள்ளிக் கூடத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.


இந்நிகழ்வை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைத்து இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்,மாநகர செயலாளரும் மூன்றாவது மண்டலத் தலைவருமான மு.மதிவாணன் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஓ.நீலமேகம் கழக மாநில இலக்கிய அணிப் புரவலரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ந.செந்தில் கலந்து கொண்டனர்,நிகழ்ச்சியினை மாவட்ட மருத்துவர் அணித் தலைவர் டாக்டர்.தமிழரசன்மாவட்ட அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு டாக்டர்.முகம்மது மன்சூர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்,

இந்நிகழ்வில் பதினெட்டாவது முறையாக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது O-நெகட்டிவ் இரத்தத்தை தானம் செய்தார் அவரை அமைச்சர் வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கி மகிழ்ந்தார், இதில் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
