திருச்சியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம்..
திருச்சியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம்.. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைதல், காலி பணியிடங்களை நிரப்புதல் ,காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உண்ணாவிரத்தை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
