AMRITPEX 2023 தேசிய அஞ்சல்தலை கண்காட்சியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளர்க்கு பாராட்டு !
AMRITPEX 2023 தேசிய அஞ்சல்தலை கண்காட்சியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளர்க்கு பாராட்டு
திருச்சிராப்பள்ளி பிளாடெலிக் கிளப் சார்பில் AMRITPEX 2023 தேசிய அஞ்சல்தலை கண்காட்சியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பாளர்க்கு பாராட்டு விழா திருச்சி தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் நிறுவனர் நாசர் வரவேற்றார். செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரை ஆற்றினார்.
AMRITPEX 2023 தேசிய அஞ்சல்தலை கண்காட்சியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சிராப்பள்ளி பிளாட்டோலிக் கிளப் தலைவரும் அஞ்சல் தலை சேகரிப்பாளருமான விஜயகுமார்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிப் பதக்கம் வென்ற அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் பேசுகையில், AMRITPEX 2023 தேசிய அஞ்சல்தலை கண்காட்சி, அஞ்சல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் கீழ் தேசிய தபால்தலை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புது தில்லியில் உள்ள பிரகதியில் உள்ள அஞ்சல் துறை மைதானத்தில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது, கண்காட்சியில் அஞ்சல் முத்திரைகள், கடிதம் எழுதுதல் மற்றும் மெய்நிகர் காட்சிகள் மூலம் இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு, இயற்கை, வனவிலங்குகள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தியது.இக் கண்காட்சி வெற்றியாளர்கள் பல்வேறு சர்வதேச தபால்தலை கண்காட்சிகளில் பங்கேற்று தங்கள் சேகரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.

நீர்ப்பறவை கருத்துருவில் அஞ்சல் தலை சேகரிப்பினை காட்சி படுத்தி இருந்தேன் 66 மதிப்பெண் வழங்கி வெள்ளி பதக்கத்தின் வழங்கினார்கள். தேசிய அளவில் வெற்றி பெற்றதன் மூலம் பன்னாட்டு அளவில் நடைபெறும் அஞ்சல் தலை கண்காட்சிகளில் பங்கேற்க இயலும் என்றார்.
பொருளாளர் தாமோதரன் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ரமேஷ், அன்பழக பாண்டியன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக
இணைச்செயலாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் நன்றி கூறினார்.
