திருச்சி Excel குழுமத்தின் சார்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அறிமுகம்….
திருச்சி எக்ஸெல் குழுமத்தின் சேர்மன் முருகானந்தம் அவர்களின் தாயார் மரகத வள்ளி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கேன்சர் நோயாளிகளுக்கான சிறப்பு எக்ஸ் எல் ரோட்டரி திருச்சி கேன்சர் கேர் ஃபவுண்டேஷன் என்ற மருத்துவமனை கட்டுமான பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
அதை தொடர்ந்து வள்ளி 2023 மற்றும் Excel விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் Spastic Society என்ற அமைப்பிற்கு ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

விழாவில் அங்குசம் மற்றும் மகரந்தம் ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் முதல் முயற்சியாக எக்ஸல் குழுமத்த்தின் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் திருச்சி தேசிய கல்லூரிகளுக்கு இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பெண்கள் கைத்தொழில் சிறப்படைய 10 ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

சமூகத்தில் சிறப்பாக பணியாற்றிய ரோட்டரி அல்லாத பத்து நபர்களுக்கு பால்ஹாரிஸ் பெல்லோ எனப்படும் ரோட்டரி உயரிய விருது அதற்கான அடையாள பின் வழங்கப்பட்டது.
மேலும் சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக பங்களிப்பை அளித்து வரும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் எக்ஸ்எல் குழுமம் சார்பில் 25 நபர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் வின்சி குரூப் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் இயக்குனர் பாஸ்கர், பாப்புலர் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், நேச்சுரல்ஸ் சலூன் முதன்மை அதிகாரி குமரவேல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ஆளுநர்கள், தலைவர்கள், செயலாளர்கள், எக்ஸெல் குழுமத்தின் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தாயார் மரகதவள்ளியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து முருகானந்தம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது தந்தை மருதையன், மனைவி சுமதி, மகள் பிரியதர்ஷினி, மகன் பிரவீன் கார்த்திக் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
