போப் ஜான் பால் II, நினைவார்த்த வெள்ளி உலோக அஞ்சல் தலை சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி பிளாடெலிக் கிளப் சார்பில் போப் ஜான் பால் II, நினைவார்த்த வெள்ளி உலோக அஞ்சல் தலை சிறப்பு சொற்பொழிவு. நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் வரவேற்றார். தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார் துவக்க உரை ஆற்றினார்.
அஞ்சல் தலை சேகரிப்பாளர் ரமேஷ் போப் ஜான் பால் உலோக அஞ்சல் தலை குறித்து பேசுகையில், காம்பியா குடியரசு, ஒரு மேற்கு ஆப்ரிக்க நாடாகும். ஆப்ரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன.

பெப்ரவரி 18, 1965 இல் காம்பியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும். காம்பியா 2005 ஆண்டு போப் ஜான் பால் II, நினைவார்த்த வெள்ளி முலாம் உள்ள உலோக அஞ்சல் தலையினை வெளியிட்டுள்ளது என்றார்.
பொருளாளர் தாமோதரன் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக
இணைச்செயலாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் நன்றி கூறினார்.
-வெற்றிச்செல்வன்
