திருச்சி சுப்ரமணியபுரத்தில் பயணிகள் நிழற்குடை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்!
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் 48 வது வார்டுக்கு உட்பட்ட ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வேண்டுகோளின் படி கவுன்சிலர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் வேண்டுகோளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதனை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். விழாவை யொட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதி செயலாளர் தர்மராஜ், துணைச் செயலாளர் ஜெகதாம்பாள், வட்டச் செயலாளர்கள் நாகவேணி மாரிமுத்து, மனோகர், ஜமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
