திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக அங்கன்வாடி மையத்திற்கு பொருளுதவி!
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பில் கள்ளிக்குடி ஊராட்சி அருவாகுடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு மேசை மற்றும் விளையாட்டு வழி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி விரிவாக்கத்துறையின் இயக்குநர் பெர்க்மான்ஸ் சே ச வழி காட்டுதலின்படி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி வடக்கு ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி கல்வி மைய இணை இயக்குநர் பெலிக்ஸ்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கதை பாடல் வழியாக குழந்தைகளை உற்சாப்படுத்தினார்.

விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கிராம தலைவர் அருண் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வணிகவியல் துறை மாணவன் அனுபவ் விஷால் வந்தவர்களை வரவேற்றார். முடிவில் சஞ்சய் நன்றி கூறினார் லிங்கேஷ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் குழந்தைகள் அனைவருக்கும் கார இனிப்புகள் வகைகள் வழங்கப்பட்டன.
