திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழாய்வுத்துறை திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பாக
(08/3/2023) புதன்கிழமை அன்று தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக தமிழாய்வுத்துறைப் பொறுப்பாளர் முனைவர் சி. பிரபாகரன் வரவேற்புரை வழங்கினார். அடுத்ததாக மகளிர் தின சிறப்புப் பட்டிமன்றம் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் அ. சசிகலா தேவி அவர்கள் நடுவராகப் பொறுப்பேற்று ” குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது பெண்களா? ஆண்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது.
தொடக்கத்தில் நடுவர் பெண்களின் சிறப்பையும் ஆண்களின் பெருமைகளையும் கூறி பட்டிமன்றத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக பேச்சாளர்கள் தம் பேச்சை தம் குழுவிற்கு ஏற்ற வகையில் பேசினார்கள்.
பெண்களே என்ற அணியில்:

1. செ. கன்னிகா முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
2. த. நந்தினி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு
3. ஏ. கிருபாகணேஷ் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு
4. பா. இலக்கியா இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு
5. மு. பவித்ரா இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு.

ஆண்களே என்ற அணியில்:
1. சா. தீபா இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
2. சீ. கமலஸ்ரீ இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
3. சு. ராஜேஸ்வரி இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
4. வ. திரிஷா இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
5. செ. சாந்தி இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
என்ற பத்து பேச்சாளர்களும் தன் பேச்சை அனல் பறக்கும் அளவிற்கு மிகச்சிறந்த முறையில் பேசினார்கள்.
இறுதியாக நடுவர், மாட்டு வண்டியை இரண்டு மாடுகள் எவ்வாறு இழுத்துச் செல்கிறதோ அதுபோல ஆணும் பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று ஆணும் பெண்ணும் சமூகத்திற்கு இரு கண்கள் போன்றோர்கள். எனவே ‘ குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது ஆணும் பெண்ணும் இணைந்து தான் துணையாக தூணாக செயல்பட வேண்டும் என்று தராசு போல் தீர்ப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம. புனிதவதி நன்றியுரை வழங்கினார். நிகழ்வை தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம. புனிதவதி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று பார்த்து மகிழ்ந்தனர்.
– ஏ. கிருபாகணேஷ் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு நேரு நினைவுக் கல்லூரி
