NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பில் அகில உலக மகளிர் தினம் கொண்டாட்டம்!

0

2023 மார்ச் 12 அகில உலக மகளிர் தினத்தைக் கடந்த 22 ஆண்டுகளாகக் கிராம மக்களை மேம்பாடு அடைய செய்ய பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திருச்சியில் இயங்கி வரும் கிராம மக்கள் விடுதலைக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளையால் கொண்டாடப்பட்டது.

நிகழ்விற்கு நீதிபதி M. மகாலெட்சுமி திருச்சி இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து தலைமையேற்றார்கள். நிகழ்வின் தொடக்கமாக இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, சென்னை புகழ் கவிதா ராஜ் கலாலயா இயக்குநர், நிறுவனர் மற்றும் நிகழ்த்துனர் அவர்களின் ‘கவிதா கலாலயா பரத நாட்டிய மாணவிகள்’ வரவேற்பு நடனமாடி விழாவினை இதனைத் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது.

குத்துவிளக்கினை அருட்தந்தை ஜான் செல்வராஜ் செயலர் மற்றும் இயக்குநர் சிறப்பித்தார்கள். TMSS, Trichy, M. மகாலெட்சுமி தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி, G. அனுசுயா மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, Dr. தமிழரசி சுப்பையா முன்னாள் பொது சுகாதார குழு தலைவி, மற்றும் பெர்ல் அறக்கட்டளையின் இயக்குநர் வழக்கறிஞர் Dr.R. ராமச்சந்திரன், பெர்ல் அறக்கட்டயிைன் துணை இயக்குநர் கவிஞர் கவி செல்வா என்கிற R.செல்வராணி அவர்களும் ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள்.

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைத் தலைவர் & பேராசிரியர் முனைவர் அ.ஜெஸிந்தா ராணி வரவேற்புரையாற்றினார். அத்தருணத்தில் சிறப்பு விருந்தனர்களுக்குப் பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து அருட்தந்தை ஜான் செல்வராஜ் செயலர் மற்றும் இயக்குநர் (TMSS, Trichy) அவர்கள் ஆசியுரை வழங்க, M. மகாலெட்சுமி இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி தலைமையுரை ஆற்றினார்.

5

G. அனுசுயா மாவட்ட தியணைப்பு மற்றும் மீட்புத்துறை அவர்கள் அரசு இயந்திரத்தில் பெண்கள்’ எனும் தலைப்பிலும், Dr. தமிழரசி சுப்பையா முன்னாள் பொது சுகாதார குழு தலைவி அவர்கள் ‘குடும்பவியலில் பெண்கள்’ எனும் தலைப்பிலும், பெர்ல் அறக்கட்டயிைன் துணை இயக்குநர் கவிஞர் கவி செல்வா என்கிற R.செல்வராணி அவர்கள் ‘பெண்களும் தியாகமும்’ எனும் பொருண்மைகளில் உரையாற்றினார்கள்.

3

பெர்ல் அறக்கட்டளையின் உறுப்பினர் மற்றும் நிர்வாக செயலர் நன்றியுரை வழங்க முதல் அமர்வு நிறைவடைந்து. அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.  இரண்டாம் அமர்விற்கு தி.மு.க.வின் திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் G.திவ்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.

நிகழ்வின் தொடக்கமாகப் பேராசிரியர் முனைவர் ச.புனிதா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை மற்றும் நினைவு கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தி.மு.க.வின் துணை மேயர் G.திவ்யா அவர்கள் ‘இன்றைய உலகில் பெண்ணியம்’ எனும் தலைப்பிலும், அருட்தந்தை முனைவர் S. ஜான் வசந்த குமார், முதல்வர், ஆனந்தா கல்லூரி, தேவக்கோட்டை அவர்கள் ‘வாழ்வியலில் பெண்கள்’ எனும் தலைப்பிலும், T.K. லில்லி கிரேஷ் T.P.S தமிழ்நாடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) அவர்கள் ‘நாளைய உலகில் பெண்ணியம்’ எனும் தலைப்புகளிலும் உரை நிகழ்த்தினார்கள்.

பெண்கள் தினத்தை முன்னிட்டு டாக்டர். சர்வ பள்ளி இராதகிருஷ்ணன் விருது V.கீதா கண்ணன், Correspondent, My Madurai School, Madurai அவர்களுக்கும், நாட்டிய கலா பூஷன் விருது, Mrs. கவிதா ராஜ், Director, Founder & Performer, Kavitha kalalaya School of Barathanatyam Chennai அவர்களுக்கும், வேலு நாச்சியார் விருது, Mrs.E.ராஜேஷ்வரி, Inspector of Police, Chennai அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது, A.K.கோமதி Headmistress அவர்களுக்கும், அன்னை தெரசா விருது, Sr. லில்லி சகாயமேரி, Headmistress St.Joseph’s Girls Hr.Sec.School, ponmalaipatti அவர்களுக்கும், முத்தமிழ் டாக்டர் கலைஞர் கருணாநிதி விருது, ஜெயஸ்ரீ மனோகரன் Social Activist & Chairperson Lions club International, Chennai அவர்களுக்கும், ஜான்சி ராணி விருது, AMS. முத்து மாலா தேவி, Deputy Area Commonder, Tamilnadu Head Quarters, Trichy District அவர்களுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது, Advocat Madurai High Court – Madurai Bench அவர்களுக்கும், டாக்டர் APJ அப்துல் கலாம் விருது, Rev. S. ஜான்சி ராணி Theological inter faith Research student அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது, Reverse Reader செல்வி மனோன்மணி அவர்களுக்கும் என 9 சிறப்பு விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பங்கேற்பாளர்களுக்கு கோப்புடன் கூடிய வாழ்வியல் முன்னேற்றத்திற்கான குறிப்பேடு, பேனா மற்றும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. பெர்ல் அறக்கட்டளையின் உறுப்பினர் அக்குபஞ்சர் மருத்துவர் டாக்டர் ஷீலா நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

4
Leave A Reply

Your email address will not be published.