கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் 140 வது நினைவு தினம் அனுசரிப்பு!
கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் அவர்களின் 140 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று 14.03.2023 அனுசரிக்கப்பட்டது . இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருச்சி தில்லை நகர் 7 வது கிராஸ் ஆட்டோ ஸ்டாண்டில் (அரசன் ஸ்வீட்ஸ் கடை அருகில்) காலை 10.30 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் நினைவஞ்சலி நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்விற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை ஏற்று நடத்தினார். மாநில பொதுச் செயலாளர் பாடகர் கோவன் பங்கேற்று காரல் மார்க்ஸ் அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பகுதி பொறுப்பாளர் விடுதலை, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் செழியன், ஆகியோர் நினைவஞ்சலி உரை நிகழ்த்தினர்.
ஏற்கனவே ஆளுநர் ரவி காரல் மார்க்ஸ் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்ததையும் கண்டித்து முழக்கங்கள் இடப்பட்டது. இந்நிகழ்விற்கு ஜனநாய சமூக நல கூட்டமைப்புநிறுவனர் சம்சுதின், சமூக நீதிப் பேரவை நிறுவனர் ரவிக்குமார், அமைப்பு சார தொழிலாளர் இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சைனி, ஆதித் தமிழர் பேரவை மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் சோழன், மாவட்ட செயலாளர் மாணிக்முருகேசன் மாவட்ட மகளிர் அணி தலைவி இராசாத்தி அம்மாள், மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர், என பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

புதிய ஜனநாயக தொழிலாள முன்னணி மாவட்ட செயலாளர் மணலிதாஸ் நன்றி உரையாற்றி இந்நிகழ்வினை முடித்து வைத்தார்.
