திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா!
2023 ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு அறிவித்ததை முன்னிட்டு செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறுதானிய ஆண்டு விழா தாவரவியல் சார்பாக கொண்டாடப்பட்டது பனிரெண்டு கல்லூரிகளில் இருந்து 15 உயிரியல் துறை சார்ந்த மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
செயின்ட் ஜோசப் கல்லூரித் தாவரவியல் துறைத்தலைவர் எஸ்.ஆர். செந்தில் குமார் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார்.
தம் தலைமை உரையில், துரித உணவு உண்ணவும் நுகர்வு கலாச்சாரத்தில் உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை உணர்ந்து இளைய சமுதாயத்தினர் சிறுதானியத்தைத் தங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் டேவிட் ராஜா சிறுதானிய ஆண்டின் முக்கியத்துவத்தையும் சிறுதானியங்களில பொதிந்துள்ள ஊட்டச்சத்துக்களையும் தமிழரின் உணவு அறிவியல் குறித்து மேற்கோளிட்டு அறிமுக உரையாற்றினார்.

அறிவு சார் போட்டிகளான வினாடி வினா, சிறுதானியங்கள் ஓவியம், பேச்சு போட்டி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பழமையை மீட்டெடுத்து பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் தாவரவியல் துறை சார்ந்த உச்சியை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்கள் சார்ந்த உணவுப் பதார்த்தங்களைத் தயார் செய்து காட்சிப்படுத்தி அதன் உடல் நலம் சார்ந்த பயன்களை எடுத்துக் கூறினர். காலத்திற்கு ஏற்றவாறு
சிறுதானியங்களைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் துரித உணவுப் பொருள்களான தினை நூடுல்ஸ், குதிரைவாலி நூடுல்ஸ், கேப்பை நூடுல்ஸ், வரகு வெண் பொங்கல் போன்ற உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மித்ரா மில்லட் நிறுவனத்தின் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டன.
நிறைவு விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் சிறுதானியங்களின் தொன்மை மற்றும் சிறுதானியங்களுடனான தமிழர்களின் பயன்பாட்டு முறைகளையும் எடுத்து கூறி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
காவேரி மகளிர் கல்லூரியின் உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவு முறை துறை முதலிடத்தையும் நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி தாவரவியல் துறை இரண்டாம் இடத்தையும் பெற்றது.
நிறைவில் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் டேவிட் ராஜா அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு மாணவர்கள் தமிழ்வாணன், விஜய் ஜெபர்சன், விக்னேஸ்வரன் மற்றும் தாவரவியல் துறை மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
-சலோ
