லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் நேரு!
லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் நேரு!
லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியை (15.03.2023) காலை நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா (15.03.2023) காலை நடந்தது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

இதில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கலந்து கொண்டு, புதிய தாய் சேய் நல மைய கட்டிடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

எம்எல்ஏக்கள் லால்குடி சவுந்திரபாண்டியன், துறையூர் ஸ்டாலின், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஆர்டிஓ வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து, பெருவளநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் புதிய சமையலறை கட்டிடம், லால்குடி நகராட்சி சாந்தி நகர் மற்றும் அல் மதினா நகரில் தலா ரூ. 43 லட்சம் மதிப்பில் பூங்கா அபிவிருத்தி பணிகள், அப்பாத்துரை ஊராட்சி தெற்கு சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் புதிய சமையலறை கட்டிடம் பணிகள், தாளக்குடி ஊராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் அய்யன் வாய்க்கால் மயான தெருவில் சாலையை பலப்படுத்துதல் பணிகள் மற்றும் தாளக்குடி ஊராட்சி பொது நிதி ரூ. 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மேலவாழை மயான சாலையை பலப்படுத்துதல் பணிகள் ஆகிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
விழாவில் சேர்மன் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் துரைமாணிக்கம், துணை தலைவர் சுகுணா ராஜ்மோகன், லால்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செழியன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்தவர்களை லால்குடி நகராட்சி கமிஷனர் குமார் வரவேற்றார்.
