NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

துறையூர் அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு ! முகமூடி ஆசாமிகள் கைவரிசை !

0

துறையூர் அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு ! முகமூடி ஆசாமிகள் கைவரிசை !

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி செல்லபாப்பு இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் அமர்ந்து வெங்காயம் அரிந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது சாலையின் கீழ் புறம் இரு சக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் நின்று கொண்டு இருந்தார்கள் எனவும் அதில் ஒருவர் வாகனத்தை ஓடவிட்டபடி முகத்தில் மாஸ்க் அணிந்தும் கையில் கையுறைகள் அணிந்தும் நின்றுள்ளனர்.

3

வாகனத்தில் இருந்த ஹெல்மெட் அணிந்த மற்றொரு நபர் எதிர்பாராத நேரத்தில் செல்லபாப்பாவை தலையில் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.

திருடன் திருடன் என்று கத்திக்கொண்டு பின்னால் சென்றும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார் இது பற்றி அவரது மகன் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கிராமப் பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5

-ஜோஸ்

4
Leave A Reply

Your email address will not be published.