வெளிநாட்டு பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்திய திருச்சி பறவைகள் பூங்கா !
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தையடுத்த சோமரசம்பேட்டையில், திருச்சி பறவைகள் பூங்கா செயல்பட்டு வருகிறது. ஏ.கே. ஃபன் ஜோன் நிறுவனத்தாரின் முன்னெடுப்பில் உருவான இப்பூங்காவை, திருச்சியை சேர்ந்த சேவை தொண்டு நிறுவனத்தார் பராமரித்து வருகிறார்கள்.
இப்பூங்காவின் சிறப்பம்சத்தை அறிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்த வண்ணமிருக்கின்றனர். கடந்த பிப்-14 காதலர் தினத்தன்று, பிரஞ்சு நாட்டை சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று பூங்காவை பார்வையிட வந்திருந்தார்கள். அவர்களின் கல்வி மற்றும் கலாச்சார வெளிப்பாடு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பூங்காவிற்கு வந்திருந்தவர்களை, பூங்காவின் சிறப்பம்சங்கள் அவர்களை பூரிப்படைய செய்திருக்கிறது.
வண்ணமயமான கிளிகளை தங்கள் தோள்களில் தவழவிட்டு பேரானந்தபட்டார்கள். விசாலமான பரப்பில், சுதந்திரமான வனவிலங்குகளுடனான நேரடி அனுபவம் அவர்களுக்கு புதுமையானதாக இருந்ததாக குறிப்பிட்டார்கள்.
பொழுதுபோக்கு மற்றும் இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் ஆழமான பாராட்டு ஆகியவற்றை வழங்கியது. இந்த வருகை தளர்வு மற்றும் மகிழ்ச்சியை வழங்கியது மட்டுமல்லாமல், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு கல்வி அனுபவமாகவும் செயல்பட்டது.
சுற்றுலா என்ற அர்த்தத்தில் வெறுமனே மன மகிழ்வை வழங்கும் அனுபவமாக மட்டுமின்றி, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அவசியத்தை கள அனுபவமாக தாங்கள் கற்றுணர்ந்ததாக நெகிழ்வோடு பகிர்ந்துகொண்டார்கள்.
— கிருஷ்