திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ்,தொட்டியம் சரவணன், கேஆர் ராஜலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கலந்துகொண்டு பேசினார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்கள் இதுவரை 42 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பாக அது 50 ஆயிரத்தை எட்டிவிடும் – திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும்.
காங்கிரஸ் தலைமையில் இருந்து வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்.
திமுக உடன் தொகுதி உடன்பாடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூடிய விரைவில் முடிவு எட்டப்படும்.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல் ரெக்ஸ், தொட்டியம் சரவணன் கே ஆர் ஆர் ராஜலிங்கம், புதுக்கோட்டை பெனட் அந்தோணி ராஜ், மாநில சிறுபான்மை பிரிவு முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சிறுபான்மை பிரிவு முதன்மை மாநிலத் துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார்,கவுன்சிலர் சோபியா விமலா ராணி,இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அபுதாகிர், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், ராணுவ பிரிவு ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் எல்.ஐ.சி ஜெயராமு,மாவட்ட பொருளாளர் முரளி,கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், அமைப்புசாரா மகேந்திரன், ஆராய்ச்சித்துறை விஜய்க்கு பாண்டியன், மலர் வெங்கடேசன், அழகர்,மனித உரிமைத் துறை எஸ்.ஆர் ஆறுமுகம்,கலைப் பிரிவு அருள்,ஐடி பிரிவு கிளமெண்ட் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பி எல் ஏ 2 நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கினார்.