இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் மற்றும் காட்டூர் அர் ரஹ்மான் பள்ளிவாசல் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா திருச்சி காட்டூர் அர் ரஹ்மான் பள்ளிவாசலில் நடைபெற்றது.விழாவுக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கி பேசினார். திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தொடக்க உரையாற்றினார். அர்ரஹ்மான் பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான் சாஹிப் வரவேற்றார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் விழாவில் தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் டாக்டர் சுபேர் கான், கிழக்கு மாநகர திமுக செயலாளர்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் நாகை சாகுல் ஹமீது, துபாய் அன்வர்அலி, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில அமைப்பு செயலாளர் சென்னை சல்மான் பக்ஷிர், தென்சென்னை மாவட்ட செயலாளர் அசேன் கான், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக கர்நாடக மாநில செயலாளர் பெங்களூர் சையத் அக்பர் அகமத், மாநில மாணவரணி தலைவர் ஆரிபுல்லா,மாநில தலைமை செயலாளர் கொட்டாம்பட்டி அப்துல் லத்தீப், மாநில அமைப்பு செயலாளர் சோமராசம்பேட்டை அல்லா பிச்சை,
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மஜீத்,தலைமை செயலாளர் சாதிக்கான் , மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் கான், முகமது இக்பால், இளைஞரணி அப்துல் ஹக்கீம், ரியாஸ் அகமது, அப்துல் ஹையும், கடலூர் மாவட்ட தலைவர் நூர்முகமது, திண்டிவனம் கமாலுதீன், முகமது பாரூக், எஸ் டி பி ஐ மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி, மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட தலைவர் ஹபீபுர்ரஹ்மான், திமுக அயலக அணி கிழக்கு மாநகர செயலாளர் என்ஜினீயர் இப்ராம்ஷா, ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில தலைவர் கமலக்கண்ணன், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில அமைப்பு செயலாளர் பட்டுக்கோட்டை அப்துல்சுக்கூர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் குத்புதீன், கவுன்சிலர் தாஜுதீன், காமராஜ்நகர் வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா, செயலாளர் யூசுப், திமுக வட்ட செயலாளர்கள் தவசீலன், மன்சூர்அலி, தஞ்சாவூர் பைசல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.