கோவில் தேரோட்டம் நடைபெறுமா?

0

திருவானைக்காவல் இனாம் ஒழிப்பு மீட்பு குழு தலைவர் மாரி என்கிற பத்மநாபன், பாஜக திருவரங்கம் மண்டல் நிர்வாகிகள் கொண்டையம் பேட்டை பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சந்திரசேகர், இன்ஜினியர் பெரியசாமி, பாலச்சந்திரன், குரு சுப்ரமணியன், விஜயகுமார், சாக்கடீஸ் மெக்கானிக் பாஸ்கர் ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

TrichyJambukeswarar-Akilandeswari Temple Panguni Therotam will be held on  23rd TNN | திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி  தேரோட்டம் தேதி அறிவிப்பு

அந்த மனுவில திருச்சி திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலின் தேர்கள் இந்த ஆண்டு ரூ. 3.5 லட்சம் செலவு செய்து பழுது சீரமைக்கப்பட்டு, கடந்த 22 ஆம் தேதியன்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. அப்போது தேரின் அச்சு மீண்டும் பிரண்டு சிறிது தொலைவிலேயே தேர் நின்றுவிட்டது. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் தேரினை சீரமைப்பதற்காக ரூபாய் 3 லட்சத்து ஐம்பதாயிரம் கோவில் நிர்வாகம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடை கொடுத்தவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆகவே உயர் அதிகாரிகள் முறைப்படி தேரினை ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான நன்கொடை விவரங்களையும் வெளியிட வேண்டும்.
மேலும் வருகிற இருபதாம் தேதி நடைபெறும் தேர் திருவிழாவின் போது எந்தவித விபத்தும் ஏற்படாத வண்ணம் தேரினை சீரமைத்து தந்தும் வருகிற காலங்களில் புதிய தேரினை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.