திருச்சி தென்னூர் பெரிய நாச்சியம்மன், வீரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
திருச்சி தென்னூர் பெரிய நாச்சியம்மன் சமேத ஸ்ரீ வீரிய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழ நாளை மறுநாள் 8ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.01 மணி முதல் 8.31 மணி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 5ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு பூர்ணாஹீதி, தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6ந்தேதி (வெள்ளிக்கிழமை) இன்று காலை 7.01 மணிக்கு காவேரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது -இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து முதல் காலம் யாக சாலை பூஜை மாலை 5.01மணிக்கு தொடங்கிறது.
7ந் தேதி காலை 8.31 மணிக்கு இரண்டாம் காலம் பூஜை நடைபெறுகிறது. பிறகு மதியம் 1.31 மணிக்கு அனைத்து சாமிகளுக்கும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை யாக பூஜை நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு மூன்றாம் காலம் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து 8ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.01 மணிக்கு 4ம் காலம் யாக சாலை பூஜை ஆரம்பயாகிறது. காலை 6.01 மணிக்கு பரிவார யாக சாலை பூர்ணாஹீதி நடக்கிறது.காலை 8.01 ஒரு மணிக்கு அனைத்து விமானங்களுக்கும் ஏக காலத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிறகு காலை 8:31 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 11 மணிக்கு மகா அபிஷேகம் தீபாராதனை காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கும்பாபிஷேகத்திறக்கான ஏற்பாடுகளை ராஜா மற்றும் பட்டக்காரர் சண்முகம், மந்திரி மற்றும் டிரஸ்ட் எம்.டி.எஸ். ரவிக்குமார், மத்தியஸ்தர் செல்வராஜ் மற்றும் பெரிய நாச்சியம்மன் வீரிய பெருமாள் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீராம், பொருளாளர் ரமேஷ் என்கிற எம் டி டி காசிராமன், துணைத் தலைவர் கார்த்திகேயன் துணை செயலாளர் மாரியப்பன், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஐந்து கோத்திர குடிமக்கள் செய்து வருகின்றனர்.