செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்னோவெத்தான் 2026 நிகழ்வு !

0

திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி இன்னோவெத்தான் 2026 என்னும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி போட்டியில் மருத்துவ அறிவியல் மாணவர்கள் உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் 42 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இன்னோவெத்தான் 2026உயிர் அறிவியல் புல முதன்மையரும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பிரான்சிஸ் சேவியர் வரவேற்புடன் நிகழ்வு தொடங்கியது. கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்து கண்காட்சியைப் பார்வையிட்டார். ஸ்மார்ட் ஹோம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி நோக்கிய மாணவர்களின்  கண்டுபிடிப்புகள், பசுமை மின்னணுவியல், பசுமை சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் காட்சிப்படுத்த்ப்பட்டிருந்தன.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவிற்குக் கல்லூரிச்செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. தலைமை வகித்து, பங்கேற்பாளர்களைப் பாராட்டி வாழ்த்துரையாற்றினார். தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை இயக்குநர் முனைவர் பால்கன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இன்னோவெத்தான் 2026அவர் தம் சிறப்புரையில், மாணவர்கள் வேலை தேடுபவர்கள் என்பதிலிருந்து, வேலையை உருவாக்குபவர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளமையைப் பாராட்டி அறிவியல் சார்ந்த புதுமையான கண்டுபிடிப்புகளில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாகத் திகழ்கிறது என்பதை எழுத்துச்சொல்லி, மாணவர்களை உற்சாகப்படுத்தியதுடன் இம்முயற்சியை எடுத்துள்ள கல்லூரி நிர்வாகத்தினரையும் பாராட்டினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் எனப்படும் புதுமை முயற்சிகளை ஊக்குவிக்கும் 13,000 அமைப்புகள் 13,000 உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட்அப் மையங்கள் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னோவெத்தான் 2026நிறைவில் இனோவேஷன் 2026 பரிசுத் தேர்வில் வெற்றிபெற்ற கேரளா மாநில திருச்சூரைச் சார்ந்த அமலா மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.  நிறைவில் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் உயிர் அறிவியல் புல முதன்மையர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.