வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் ! மகிழ்ச்சி கடலில் இல்லத்தரசிகள்!

0

திருச்சி-கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர் உரிமைத் தொகை திட்டம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் வழங்கி வந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில் மகளிருக்கான உரிமைத் தொகை தடை பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் முன்கூட்டியே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிர் வங்கி கணக்கில் கோடை கால சிறப்பு தொகை ரூ 2 ஆயிரம் மற்றும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு தலா ஆயிரம் விதம் மொத்தம் ரூ 5 ஆயிரம் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டது. இதனால் மகளிர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து திருச்சியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருச்சியில் திமுக சார்பில் திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகரம் 58 வது வார்டு கிராப்பட்டி பகுதியில் திமுக வட்ட செயலாளரும், மாநில திமுக பொதுக்குழு உறுப்பினருமான கிராப்பட்டி செல்வம் தலைமையில் கவுன்சிலர் கவிதா செல்வம் முன்னிலையில் மகளிருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இதேபோல் தென்னூர் அண்ணா நகர் பகுதியில் பகுதி செயலாளர் கவுன்சிலர் கமால் முஸ்தபா தலைமையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோல உறையூர் பகுதியில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .

இதே போன்று திருச்சி மாநகரம் முழுவதும் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து பெண்கள் கூறும் பொழுது முதலமைச்சர் எங்களுக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சியை இன்று காலை கொடுத்துள்ளார். இப்படி வழங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.கோடை காலம் தொடங்கும் நேரத்தில் எங்களுக்கு குளிர்ச்சியாக இருக்க ரூ 5 ஆயிரம் பணம் வழங்கி உள்ளார்.

இந்த பணம் தாய்மார்களாகிய எங்களுக்கு குடும்ப செலவுக்கு உதவியாக இருக்கும். மேலும் இந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்கவும் முடிவு செய்துள்ளோம். மீண்டும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் பெண்களான நாங்கள் திமுகவிற்கு தான் ஒட்டு போடுவோம் என்று கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.