ரூ.1 கோடியே18 லட்சம் மதிப்புள்ள அரசு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா !
திருவெறும்பூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு அண்ணா நகர் அரசு பள்ளியில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் நாவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சுகாதார வளாகத்தையும் திறந்து வைத்தார் மேலும் இதனையடுத்து நவல்பட்டு பர்மா காலனியில் 3 லட்சம் மதிப்பீட்டில் அரசு துவக்கப் பள்ளியில் புதிய கழிவறை இதேபோல் பழங்கனாங்குடி ஊராட்சியில் 7.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையிலும் கலந்து கொண்டார்
மேலும் இதே போல் காந்தலூர் ஊராட்சியில் 7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு துவக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமையலறையை திறந்து வைத்தும், கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் 16 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வடிகால் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியும்,அதே ஊராட்சியில் 7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமையலறையை திறந்து வைத்தார் வேங்கூர் ஊராட்சியில் 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சீரனிஅரங்கத்திற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கான பூமி பூஜை விழாவிலும் கலந்து கொண்டார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் இந்நிகழ்வில் திட்ட இயக்குனர் கங்காதரணி திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை திருவெறும்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.