தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல ! இந்தியாவே கடனில் தான் உள்ளது ! – வைகோ

0

திருபுவனைத்தில் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில்  36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் இருந்து அகற்ற தொடர் போராட்டம் நடத்தினேன். அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இந்த சூழலில் பசுமை தாமிரம் என்ற பெயரில் தொழிற்சாலை ஆரம்பிக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொள்கிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில்  இருந்து இயந்திரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

வைகோஇந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகர் மக்களுக்கு சுற்றுவட்டார மக்களை கொண்டு வந்து மனுகொடுக்க செய்து எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறார்.

பொதுமக்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

காங்கிரஸ், இண்டியா கூட்டணியில் நீடிக்குமா ? நீடிக்காதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம்  செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றே நம்புகிறேன்.

திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும் கட்சியாக  வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் போக்கு உள்ளது.

இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காதுகுத்து வேலை என எடப்பாடி விமர்சித்துள்ள ராரே ? என்ற கேள்விக்கு

இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை என்றார். தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார். மீண்டும் முதல்வர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி.துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு , மணவை தமிழ்மாணிக்கம் , டி.டி.சி .சேரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.