இலவச தையல் பயிற்சி வகுப்பு ! துவக்கி வைத்த இனிகோ இருதயராஜ் !

0

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 15-வது வார்டு சஞ்சீவி நகரில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் கிழக்குத் தொகுதி பெண்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் திறனையும் மேம்படுத்தும் வகையில் LGT Promoters மற்றும் Usha Silai School இணைந்து பெண்களுக்கு இலவச பயிற்சியளித்து, சான்றிதழுடன் கூடிய ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 100 தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான பயிற்சி வகுப்பினை சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் LGT Promoters மேலாண்மை இயக்குனர் வெல்ஃப்ரெட் செல்வராஜ், LGT Promoters இயக்குனர் பத்மா வெல்ஃப்ரெட், உஷா இன்டர்நேஷனல் மேலாளர் வடிவேல் பெருமாள், மண்டலம் 3 கோட்ட தலைவரும், மாநகர செயலாளருமான மதிவாணன், மண்டலம் 1 கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதி செயலாளர் மருந்து கடை மோகன், மாமன்ற உறுப்பினர் தங்கலட்சுமி தசரதன், வட்ட செயலாளர்கள் எம்.ஆர்.சி.சந்திரன், சண்முகம், அயலக அணி அமைப்பாளர் அடைக்கலராஜா உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.