அட, நம்ம திருச்சியில இப்படி ஒரு அட்டகாசமான வாய்ப்பா ?
அட நம்ம திருச்சியில் இப்படி ஒரு அட்டகாசமான வாய்ப்பா? அட ஆமாங்க. டிகிரி படிச்சாலும் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலையேனு தவிச்சிட்டு இருக்கிற காலத்துல, பல்வேறு காரணங்களால நாம படிக்காம போயிட்டோமேனு வருத்தப்படுறவங்கள பார்த்திருக்கோம். இனி, அந்த கவலை தேவையே இல்லை.
நம்ம திருச்சியில ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனமும் ஹோப் பவுண்டேஷனும் இணைந்து Tally, Data Entry, DTP, Basic Computer, GDA – General Duty Assistant மற்றும் English Language Communication-னு பல்வேறு விதமான திறன் பயிற்சிகளை வழங்குறாங்க. இந்த பயிற்சிக்காக நீங்க ஒத்த ரூபாய செலவு பண்ண வேண்டிய அவசியமே இல்லை. முற்றிலும் இலவசமாவே சொல்லித்தாராங்க.
குறைந்தபட்சம் 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். நீங்கள் இந்த கோர்ஸ்ல சேர்ந்துக்கலாம். 18 வயசுல இருந்து 40 வயசுக்குள்ள இருக்கிற யாரா இருந்தாலும், 8-வது தேர்ச்சிக்குப் பிறகு என்ன படிச்சிருந்தாலும் சரி, இல்ல அதுக்கு மேல படிக்கலைனாலும் சரி இங்கே சேர்ந்து உங்க திறனை வளர்த்துக்கலாம்.
இங்கே, படிச்சவங்களுக்கு அவங்க படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி தரச்சான்றிதழ் தர்றதோட, ஓமேகா சென்டர்ல அவங்களே வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தாராங்க. குறிப்பா, கல்யாணத்துக்கு அப்புறம் படிப்புங்கிற கனவெல்லாம் தகர்ந்து போச்சேனு கவலைப்படுற இல்லத்தரசிகளுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்புன்னே சொல்லலாம். டிகிரி முடிச்சும் சரியான வேலை அமையலனு ஃபீல் பன்னிட்டு இருக்க இளைஞர்களும் இந்த கோர்ஸ்ல சேர்ந்து உங்களோட, கல்வித்தகுதியை மேம்படுத்திக்கவும் அருமையான வாய்ப்பு.
நம்ம திருச்சி வயலூர் ரோட்ல, உய்யக்கொண்டான் திருமலையில, விஜயலட்சுமி கண் மருத்துவமனைக்கு அப்படியே நேர் எதிரில் அக்ஷயா டவர்ஸ்லதான் இந்த ஒ.சி.எச். ஸ்கில் டிரையினிங் சென்டர் இருக்கு. இதோட இன்னொரு கிளை, தில்லைநகர் பாஸ்போர்ட் ஆபீஸ் பக்கத்துல லக்சுமி காம்ப்ளக்ஸ்லயும் இருக்கு.
அட, இன்னும் என்ன யோசனை? உடனே, சேர்ந்துட வேண்டியதுதானே. இந்த தகவல உங்களோட மட்டும் நிறுத்திக்காதீங்க. கண்டிப்பா, உங்களோட நண்பர்கள், உறவினர்கள், உங்களுக்கு தெரிஞ்ச அக்கம் பக்கத்துல இருக்கிறவங்கனு எல்லோருக்கும் சொல்லிடுங்க.
இத பத்தி இன்னும் கூடுதலா தகவல் வேணும்னா, 9363710245 | 9363701868 இந்த நம்பருக்கு போன் பண்ணி கேட்டுக்கோங்க.
– அங்குசம் செய்திப்பிரிவு.