எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ! மாற்றுத்திறனாளிகள் போராட்டம் !

0

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பெரியார் தெருவில் லுப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு பார்வையற்றவர்கள் முதியவர்கள் பார்வையற்றவர்களின் குழந்தைகள் ஏழை குழந்தைகள் என மொத்தம் 200 பேர் வசித்து வருகின்றனர்.

இந்த இல்லத்துக்கு கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, அதை தொடர்ந்து லூப்ரா பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மைய நிர்வாக இயக்குனர் தாமஸ் மற்றும் அந்த இல்லத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற குழந்தைகள் என்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் இல்லத்தில் கடந்த 9 நாட்களாக சிலிண்டர் மற்றும் மன்னனை இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறோம்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து பேச கூறினார்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் குறைகளை தெரிவித்தோம், ஆனால் இதுவரை சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை ஆகவே தயவு கூர்ந்து எங்களுக்கு கேஸ் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். மேலும் கேஸ் வராவிட்டால் நாளைக்கு எங்களால் உணவு சமைக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர் மேலும் இன்னொரு மனதில் எங்கள் இல்லம் கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது எங்கள் இல்லத்தின் முன்பாக வேகத்தடை இருந்தது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தார் போடுவதற்காக அந்த வேகத்தடையை அகற்றி விட்டார்கள்.

இருசக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் வேகமாக செல்வதால் மாற்றுத்திறனாளிகள் அப்பகுதியை கடப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே மீண்டும் அங்கு வேகத்தடையை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். பின்னர் மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டனர். இந்த போராட்டம் பற்றி அறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா ரவிச்சந்திரன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட வளங்கள் அலுவலர் மூலம் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் அதன் பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.