ஊழல் செய்த அதிகாரிகள்! வாக்குவாதத்தில் கவுன்சிலா்கள்! நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு!
திருச்சி மாவட்டம் துறையூர் நகர மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், இளையராஜா, ஜானகிராமன், பாஸ்கர், அம்மன்பாபு , சந்திரா, கல்பனா , நித்யா கிருஷ்ணமூர்த்தி, முத்துமாங்கனி , பிரபு, சுமதிமதியழகன், தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகர் மன்ற திமுக உறுப்பினர் கார்த்திகேயன் :நகராட்சியில் மொத்தம் எத்தனை டெங்கு பணியாளர்கள் உள்ளனர்? அவர்களுக்கு எத்தனை நாள் சம்பளம் தரப்படுகிறது ? ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிகாரியிடம் கேட்டார்.
சுகாதார அதிகாரி முரளி பதிலளிக்கும் பொழுது, பணியாளர்களுக்கு 26 நாட்களுக்கு சம்பளம் போடப்படுவதாகவும் விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களுக்குமான சம்பளம் போடுவதாக தெரிவித்தார்.
உறுப்பினர் கார்த்திகேயன் ; பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரமாண்டமான ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் , அதற்கான ஆதாரம் தன்னிடத்தில் உள்ளதாகவும் ஒவ்வொரு பணியாளருக்கும் மாதம் 26 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வரவு வைக்கப்படுவதாகவும், மீதமுள்ள நாட்களுக்கு சம்பளம் வழங்காமல் பணியாளர்களின் வங்கி வரவு செலவு புத்தகத்தில் பணம் வழங்கியதாக போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதாகவும் கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிறகு பேசிய நகர மன்ற திமுக உறுப்பினர் சுதாகர் ; நகராட்சியில் தற்பொழுது பிளீச்சிங் பவுடர் இருப்பு எவ்வளவு என்று கேட்டார். சுகாதார அதிகாரி முரளி : இன்றைய கணக்குப்படி சுத்தமாக கையிருப்பு எதுவும் இல்லை என தெரிவித்தார்.
ஆனால் 8 டன் ப்ளீச்சிங் பவுடர் வந்ததாகவும், அதற்கான பில் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் நகரில் அடிப்படை வசதிக்க தேவையான பிளீச்சிங் பவுடர் கூட இல்லாமல் நிர்வாகம் சுகாதார சீர்கேட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு ஊழல்களை அதிகாரிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி பேசும் பொழுது , தனது வார்டில் வார்டு சபா கூட்டத்தில் தெரிவிக்காத பணிகளை எல்லாம் நீங்களே தேர்வு செய்து பணிகள் செய்ய டெண்டர் கொடுத்துள்ளீர்கள். அதிகாரிகள் தங்களுக்கு தேவையான பணிகளை தேர்வு செய்து கொள்வதற்கு மக்கள் பிரதிநிதியாகிய நாங்கள் எதற்கு? மக்களை நேரடியாக சந்திப்பது நாங்கள் தான் , அவர்கள் குறைகள் என்ன என்பதை எங்களுக்குத் தான் தெரியும், எனவே எங்கள் அனுமதி இல்லாமல் பணிகளை செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்தார். இவ்வராக விவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக நகர் மன்ற தலைவர் செல்வராணி கூறினார்.
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.