ரூ.59.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

0

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 215 வீட்டுமனை பட்டா உட்பட 840 பயனாளிகளுக்கு 59.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு  நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ 2343.50 லட்சம் மதிப்பில் வீட்டுமனை பட்டா 215 பேரூக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் 80 பயனளிகளுக்கு 2800 லட்சம் மதிப்பிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட தொழில் மையம் தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய 11 துறைகள் 840 பயனாளிகளுக்கு 5978. 58 லட்சம்மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

நலதிட்ட உதவிகள்தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி பயனாளிகளுக்கு நன்மை பயக்கும் விழாவாக இந்த விழா நடைபெறுகிறது.

கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை என கோரிக்கை வைத்தது கடந்த நான்கு வருடமாக சுமார் 16,000 பேருக்கு வீட்டு மனை பட்ட பெற்று கொடுத்தது பெருமையாக உள்ளது. இதனைப் பெற்று தருவதற்கு காரணமாக உழைத்த அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதேபோல் இது போன்ற விழாக்களில் மாற்று திறனாளிகள்  விளிம்பு நிலையில் உள்ளவர்கள்  தொகுதிகளை சேர்த்து வழங்குவது என்றும் மகிழ்ச்சியாக உள்ளது.  அது போல் தற்போது 59 கோடி ரூபாய் மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு  மக்களுக்கும் தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. தற்பொழுது 11 வகையான திட்டத்தின் மூலம் 840 பேருக்கு ரூபாய் 59 கோடி மதிப்புக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் இதில் நீண்ட கால கோரிக்கையான பட்டா, மாற்றுத்திறனாளிகள், மகளிர் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட வாழ்வியல் துறை சார்ந்த திட்டங்கள் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 87 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் திருவெறும்பூர் பகுதியில் 14,64 பேருக்கு வீட்டுமனை பட்டா மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் துறைச்ச சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஆகும்.

நலதிட்ட உதவிகள்எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆதிதிராவிடர் நலத்துறை கொடுக்கப்பட்டுள்ள பட்டாவிற்கு இடம் அளந்து கொடுக்கவில்லை என பத்திரிக்கையாளர்கள் கேட்டிருந்தனர். தற்போது அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படுகிறது. திருவெறும்பூர் பகுதியில் கோர்ட், உழவர் அங்காடி, துவாக்குடி கால்நடை மருத்துவமனை உள்ளிட்டவை அமைப்பதற்கு துரை சார்ந்த அமைச்சர்களிடம் மனு கொடுத்துள்ளதாகவும் தமிழக அளவில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதனால் தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரியிடம் பேசி வருவதாகவும் அடுத்த 2.0 ஆட்சி அமைந்த உடன் செய்து தரப்படும்.

இந்த விழாவில் மண்டலம் மூன்றும் தலைவர் மு.மதிவாணன்,  பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பேரூர் கழக செயலாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.