பொதுக்கூட்டத்திற்கு இடம் தேர்வு, பிரதமர் மோடி வருகை !

0

திருச்சி பிப்.21-பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து ரெயில் மூலம் இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தார். ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

மார்ச் 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார் அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர்பான இறுதி முடிவை அறிவிப்போம்.

200 இடங்களில் திமுக வெற்றி பெறுவோம் என்கிறார்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வளவு சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை திமுக தலைவர்கள் மாற்றி மாற்றி ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.
ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை திமுக அரசு கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.

இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது திமுக கூட்டணி வலுவிழந்து உள்ளது.

இந்த நிலையில் தான் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
ஓ.பி.எஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடி வு செய்ய வேண்டும்.

திமுக அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் சொல்ல வில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக்கொண்டு நிதி கொடுக்கவில்லை தமிழக அரசு கூறுகிறார்கள்.

ஆண்டுதோறும் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. ஆதி திராவிடர் நல துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்,போட்ட பொறுப்பாளர் சிவ. சுப்பிரமணியன்,மாவட்டத் தலைவர் ஒண்டி முத்து,மாவட்டச் பொதுச் செயலாளார் காளீஸ்வரன்,வர்த்தகர் அணி ஆர்.பி. பாண்டியன், த.மா.கா.மாவட்ட தலைவர்கள் குணா,கே.டி தனபால்,மாநிலச் செயலாளர் மதிவாணன்,மகளிர் அணி கிருஷ்ணவேணி மதிவாணன்,விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதையடுத்து மார்ச் 11 – ந் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கான இடத்தை பாஜக மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.